தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை ஆண்டாக்கா பாளையத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் பல இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் எந்த முயற்சியும் எடுபடவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய செந்தில்குமார், வீடு பூட்டி இருப்பதைக் கண்டார். பல மணி நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டின் மேற்கூறையை உடைத்து பார்த்த போது தங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.