கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளனர். அதாவது கே.ஐசக், ஜெபக்குமார், ஆர்.மருதீஷ் மற்றும் ஜே.வீரமணி ஆகியோர் பள்ளியில் செயல்படும் கற்றல் கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில், எளிய பொருட்களை பயன்படுத்தி பார்வையற்றோருக்கு உதவும் வகையில் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். அதாவது இந்த மாணவர்கள் உருவாக்கிய சென்சார் மற்றும் ஷிப் போர்டுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வாக்கிங் ஸ்டிக் அதிர்வுகளை உணர்ந்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கிறது.
இதன் மூலம் பார்வையற்றோர் செல்லும்போது படிக்கட்டுகள் இருந்தால் அதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதேபோன்று மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி பாட்டரி மூலம் பயன்படுகிறது. இது பார்வையற்றோருக்கு முன்னால் உள்ள தடைகளை அடையாளம் கண்டு ஒலி மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. இது குறித்து மாணவர்கள் கூறியதாவது, தங்கள் ஆசிரியரின் வழிகாட்டுதல் படி இந்த கருவியை தயாரித்ததாக கூறுகின்றனர். இந்தக் கருவி பார்வையற்றோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று கூறினர். மேலும் வருங்காலத்தில் AI தொழில்நுட்பம் மற்றும் கூகுள் மேப்பை பயன்படுத்தி இந்த கருவியை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.