பீகாரைச் சேர்ந்த அர்ஹாம் இஷ்டியாக் என்ற இளைஞர், இந்தியா மற்றும் அமெரிக்காவில் தான் வாழும் வாழ்க்கையை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பீகாரில் சராசரி வாழ்க்கையை வாழ்ந்த தனக்கும், அமெரிக்காவில் வாழும் தற்போதைய வாழ்க்கைக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை அவர் அந்த வீடியோவில் காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் சாதாரண மக்கள் அனுபவிக்கும் பல வசதிகள், இந்தியாவில் ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது ஆடம்பரமான வாழ்க்கையாகவோ பார்க்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அங்கு உழைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், நிலையான பொருளாதார வசதிகளும் எளிதாகக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை எந்தவொரு நாட்டையும் குறை கூறுவதற்காகவோ அல்லது ஒப்பிடுவதற்காகவோ தான் உருவாக்கவில்லை என்று விளக்கமளித்துள்ள அர்ஹாம், அமெரிக்காவில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மிகவும் சீராக இருப்பதே அந்நாட்டின் தனிச்சிறப்பு என்கிறார்.

அதே சமயம், இந்திய மக்கள் திறமைசாலிகள் மற்றும் கடின உழைப்பாளிகள் என்றும், நம் நாட்டின் மக்கள் தொகை மற்றும் வளங்களை விநியோகிப்பதில் உள்ள சவால்களே சில வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதில் தடையாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Arham Ishteyak (@arham_987)

“>

இந்தியா வேகமாக வளர்ந்து வருவதையும், நமது இளைஞர்களிடம் அபாரமான திறன் இருப்பதையும் பெருமையாகப் பேசும் அவர், சரியான வாய்ப்புகளும் கட்டமைப்பும் கிடைத்தால் இந்தியாவாலும் பெரும் உயரங்களை எட்ட முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார்.