கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரி ஆர். ஜெயஸ்ரீ மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு ஒன்று தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கப்பாம்பார்க் காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய இவர், பெலகாவி சிறைக் கைதிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் கர்நாடக லோக் ஆயுக்தாவில் புகாராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெலகாவி சிறையில் பணியாற்றிய காலத்தில், கைதிகளுக்குச் சிறைக்குள் சிறப்புச் சலுகைகள் வழங்குவது, அனுமதியின்றி வெளியே இருந்து உணவு வழங்குவது மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க வழிவகுப்பது போன்ற விதிமீறல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்காகக் கைதிகளிடம் இருந்து பெருமளவில் லஞ்சம் பெறப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதி ஒருவருடன் வீடியோ காலில் பேசும்போது, அதிகாரி சீருடையைக் கழற்றிவிட்டு முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்பிங்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக லோக் ஆயுக்தா அமைப்புக்கு எழுத்துப்பூர்வமான முறையான புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விசாரனை நடைபெறுகிறது.