திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிச்சனூரில் உள்ள ஏறி தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குமரன் ஏரியை பார்க்க சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத குமரன் எதிர்பாராதவிதமாக மின்கம்பி மீது மிதித்துள்ளார். அப்போது சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.