டெல்லியில் உதித்குல்லார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை பயன்படுத்தி கடன்களை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உதித்குல்லார் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக சச்சின்மிட்டல், விஷால்ஓபராய், ஹிமான்ஷூ, ரஸ்கோத்ரா, ஷோபித்அகர்வால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் இதில் உள்ளனர்.
இவர் மீது டெல்லியில் ரூ. 4.5 கோடி கடன் மோசடி தொடர்பாக வங்கியில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இதை அறிந்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி விட்டார் என்பது தெரிய வந்ததும் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது குறித்து அவர்கள் நடத்திய விசாரணையில் உதித்குல்லார் அமிரகத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அபுதாபி காவல்துறையினர் அவரை கைது செய்து டெல்லி சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
