திமுக மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, என் தளபதி மு.க ஸ்டாலின் எங்கள் தலைவருடைய பெயரால் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற…  ஆசியாவிலேயே பெரிய நூலகத்தை அமைத்துக் காட்டியவர் நம் தளபதி அதே மாதிரி சைதாப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என்று ஆசியாவிலேயே இப்படி ஒரு அரசு மருத்துவமனை… அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனை இதுவரைக்கும் எங்கே இல்லை.

அம்மா, அம்மா என்று சொல்லி,  அம்மாவையும் சேர்த்து ஏமாற்றியவர்கள் இந்த அதிமுககாரர்கள்…. அதிமுககாரங்க தான் அம்மாவுக்கு வினையா மாறினது. திமுககாரர்கள் கூட அதிமுககாரங்களை இப்படி விமர்சனம் பண்ணி பேசுனது இல்லை. காரணம் ஜெயா டிவில தான் ஒரு பாட்டை போட்டு,  எடப்பாடி பழனிச்சாமி எல்லாரும் கால்ல விழுகிற காட்சியை பார்த்து….

சசிகலாவின் கால்ல விழுகிற காட்சியை போட்டு…. ஜெயா டிவில பாட்டு போடுறான். சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை…. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவோட கால்ல விழுந்தார் பாருங்க. அந்த மெத்தடை இதுவரைக்கும் உலகத்துல எந்த அரசியல்வாதியும் பின்பற்றியது  கிடையாது என விமர்சித்தார்.