இன்றைய நவீன சூழலில், பலர் தங்களது வழக்கமான மாத சம்பள வேலையைத் துறந்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். தொழில் தொடங்குவதற்கு பல லட்சங்களில் மிகப்பெரிய முதலீடு தேவை என்ற எண்ணத்தை உடைத்து, சிறிய அளவில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பல நிறுவனங்களை நாம் கண்டு வருகிறோம்.

அந்த வகையில், வெறும் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் மிக எளிதாகத் தொடங்கி, அதிக லாபம் ஈட்டக்கூடிய 5 முன்னணிச் சிறு தொழில்கள் குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். இன்றைய ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களே இல்லை எந்த அளவிற்கு மொபைல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கிராமம் முதல் நகரம் வரை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஒரு சிறிய கடையை அமைத்து, மொபைல் போன் மூலம் பழுது நீக்கும் சேவையுடன் ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் விற்பனையையும் தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் தொடர்ச்சியான வருமானம் தரும் தொழில்களில் இது முதன்மையானது.

இணையவழி வர்த்தகமும் பொருட்கள் பரிமாற்றமும் அதிகரித்துவிட்ட சூழலில், முன்னணி கூரியர் நிறுவனங்களுடன் இணைந்து ஏஜென்சியாகச் செயல்படலாம். அல்லது உள்ளூர் அளவில் பார்சல்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் சொந்தமாகச் சிறிய அளவில் கூரியர் சேவையைத் தொடங்கி, பின் படிப்படியாகச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யலாம்.

தற்போது சொந்தமாகச் சொகுசு கார்கள் மற்றும் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும், போதுமான கார் வாஷிங் மையங்கள் பல கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இல்லை. சொந்தமாகச் சிறிய இடம் இருக்கும் பட்சத்தில், கார் வாஷிங் மெஷின்களை வாங்கி மிகக் குறைந்த செலவில் இந்தத் தொழிலைத் தொடங்கி நல்ல லாபம் பார்க்க முடியும்.

சுப நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகள் என அனைத்து நாட்களிலும் பூக்களுக்கான தேவை சந்தையில் குறையாமல் உள்ளது. மேடை அலங்காரங்களுக்கு மொத்தமாகப் பூக்களை சப்ளை செய்யும் தொழிலை வெறும் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் இருந்து தினசரி நிலையான வருமானத்தைப் பெறலாம்.வீடுகளில் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

உங்கள் வீட்டில் தோட்டம் அமைத்து செடிகளை உற்பத்தி செய்து, அவற்றை இணையதளம் மற்றும் பிரத்யேகச் செயலிகள் மூலம் விற்பனை செய்யலாம். குறிப்பாக மூலிகைச் செடிகள் மற்றும் அலங்காரச் செடிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலாக விளங்குகிறது.