சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தற்போது பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா’ (CJP) அமைப்பு தற்போதைய சூழலில் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் வழங்கிய பிரத்யேகப் பேட்டியில் அந்த அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெளிவுபடுத்தியுள்ளார். இளைஞர்களின் ஆதரவோடு வீரியமாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, திடீரென அரசியல் கட்சியாக மாறுமா என்ற பொதுமக்களின் சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போதுள்ள சூழலில் அரசியல் களத்தில் குதிக்கும் எண்ணம் இல்லாவிட்டாலும், தங்களின் லட்சியங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் சில காலம் கழித்து மிக முக்கியமான 5 கோரிக்கைகளுடன் மத்திய அரசைச் நேரில் சந்தித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம் முதல் தங்களுக்கு உறுதுணையாக நின்று ஆதரவு கரம் நீட்டிய நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் மற்றும் நல்ல உள்ளங்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் உரித்தாக்கியுள்ளார். அதிகார வர்க்கத்திடம் தங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்பதில் இந்த அமைப்பு உறுதியாக உள்ளது.
சௌரவ் தாஸின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அரசியலில் இறங்காமல் மக்களின் உரிமைகளுக்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுக்கும் இவர்களின் இந்தப் புதிய அணுகுமுறை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
