ஒரே நாடு,  ஒரே தேர்தலை அறிவிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் அடுத்த நகர்வு இதுதானா ? முக்கியத்துவம் என்ன என்பது குறித்தெல்லாம் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? கட்சியை தொடங்குவாரா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் கட்சியை பதிவு செய்ய போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் களத்தில் அவருக்கான சாத்தியங்கள்,  வாய்ப்புகள் என்ன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய  அரசியல் விமர்சகர்கள், பொதுவாக தமிழக அரசியலில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் ?  முக்கிய நடிகர்கள் என்று பார்க்கக்கூடியவர்கள் ஒன்று ரஜினிகாந்த்.  மற்றொருவர் கமலஹாசன்.

இவர்கள் இருவருமே பார்த்தீர்கள் என்றால் ? அரசியலுக்கு வந்த காலகட்டம் என்பது ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார். கமல் அரசியலுக்கு வந்து விட்டார்.  இவர்கள் இருவருமே உடனடியாக வரவில்லை. 1996இல் நடிகர் ரஜினிக்கு வாய்ப்பு இருந்தும்,  அப்போதெல்லாம் வராத ரஜினி…  லேட்டாக தான் வந்தார். வந்தவரும் கடைசி வரை இருக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

ஆனால் விஜய்க்கு மார்க்கெட் அப்படியே இருக்கிறது. விஜய்  மார்க்கெட்  இன்னும் குறையவில்லை. அவருக்கு நடிப்பு வாய்ப்புகள் அதிக அளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அரசியல் என்று முழுமையாக இறங்கிவிட்டால்….  நடிப்புக்கு முழுக்கு போட்டு விட வேண்டும் என்ற கருத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஒரு வேலை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர்….  அவர் எதிர்பார்த்த வெற்றியோ – எதிர்பார்த்த வாக்குகளோ கிடைக்கவில்லை என்றால் ?  அவரது முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது