சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு மற்ற தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். இதைத்தொடர்ந்து மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மே 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.