எலி பிடிக்கும் வேலைக்கு தற்போது அதிக கிராக்கி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலி பிடிப்பவருக்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் சமீபத்தில் எலி பிடிப்பவரை பணிக்கு நியமித்தார்.

இந்த வேலையை செய்பவருக்கு ஊதியமாக 1.2 கோடி வழங்கப்படுகிறது. மேயர் உணவு கொறிக்கும் உயிரினம் குறைப்பு இயக்குனர் பணிக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு வெளியிட்ட போது, 900 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் கேத்லீன் கொராடி என்பவர் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.