சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களுக்கு மனநிலை சரியில்லை என்றால் unhappy leave எடுத்துக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தாங்கள் பணக்காரர்களாக இருப்பதை விட ஊழியர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.