டெல்லியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கல்காஜி பகுதியில் கனமழை காரணமாக ராட்சத மரம் ஒன்று வேருடன் விழுந்தது. கல்காஜி பிளாக் பி பகுதியில் மரம் விழுந்ததில் அடியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார். சாலையில் நீர் தேங்கி இருந்த நிலையில் மூழ்காமல் இருக்க மரத்தின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு அப்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 

அவரை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மரம் விழுந்ததில் பல வாகனங்களும் செய்தமடைந்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் அதே கல்காஜி பகுதியில் இன்று காலை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 50 வயது நபர் மற்றும் அவரின் மகள் படுகாயம் அடைந்ததனர்.