கேரளா மாநிலம் மேலபரம்பா பகுதியில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கணவருடன் பேருந்தில் சென்று கீதா என்ற பெண்ணின் தங்க செயின் திருடு போனது. இது பற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதை தொடர்ந்து உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் செயின் பற்றிய அடையாளங்களை காவல்துறையினர் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் கீதாவின் செயின் அவரது திருமண நகை என்ற தகவலை அறிந்த திருடன் அதை திரும்ப ஒப்படைத்துள்ளார்.
கீதாவின் வீட்டின் முன் திருடன் அந்த நகையை வைத்து விட்டு, மன்னிப்பு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். திருடன் தனது கடிதத்தில் இந்த செயின் என் வசம் வந்து 9 நாட்கள் ஆகியது. முதலில் நான் மகிழ்ச்சி அடைந்தேன், ஆனால் நான் அதை கையில் வைத்திருந்த போதெல்லாம் எனக்கு ஒரு மோசமான உணர்வும், நடுக்கம் ஏற்பட்டது. அதை என்ன செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தேன்.
பின்னர் அது திருமண நகை என்று தெரியவந்ததும், என்னால் வேறு யாரும் வருந்துவதை நான் விரும்பவில்லை என்று ஒப்படைத்துவிட்டேன். என் அடையாளத்தையும் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவ்வளவு நாட்கள் அதை வைத்திருந்ததற்கும், உங்களுக்கு வலியை ஏற்படுத்தியதற்கும் என்னை மன்னியுங்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
