நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு 73 வயது பெண், மதுபோதையில் 4WD கார் ஓட்டிச் சென்றுள்ளார். பஸ்ஸின் முன்னால் கடந்து, ஃபெர்ரி டெர்மினலில் உள்ள பாதுகாப்பு கம்பிகளைத் தாண்டி, நேராக நீருக்குள் பாய்ந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
🚨 DRUNK DRIVING CRASH:
Drunk elderly woman drives SUV off a wharf into the sea in New Zealand
CCTV captures the 73-year-old smashing through a glass shelter at Matiatia Wharf before plunging into the water.
The car floated as hazard lights flashed, with the driver clinging… pic.twitter.com/yReT6YWMqb
— JJBOOM (@JordyHalo80) August 29, 2025
கார் தண்ணீரில் மூழ்கியதும், அந்த மூதாட்டி வேகமாக வாகனத்திலிருந்து வெளியே வந்து நீரில் தவித்துள்ளார். அதே நேரத்தில் அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து உதவியதோடு, அவருக்கு லைஃப் ரிங் எறிந்து காப்பாற்றி இழுத்துள்ளனர். சில நொடிகளில் கார் முழுதாக நீரில் மூழ்கியது. காரின் வேகம் மற்றும் தாக்கம் காரணமாக கண்ணாடி துண்டுகள் மற்றும் உலோகங்கள் சிதறிய காட்சிகள் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இது குறித்து வஹிகே காவல் நிலையத்தின் சார்ஜன்ட் ரே மேத்யூஸ் கூறுகையில், “வாகனத்தில் ஒருவர் மட்டுமே இருந்தார். பொதுமக்கள் உடனடியாக அவரை காப்பாற்றினர்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த 73 வயது பெண்ணுக்கு 290mcg/L அளவுக்கு மதுவில் இருந்ததால்,’Excess breath alcohol’ குற்றம் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
