பஞ்சாப் மாநிலத்தின் பிரபல லவ்லி ப்ரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) அருகே நடுரோட்டில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு இளம் பெண், நடுரோட்டில் அமர்ந்து கொண்டு சைட் டிஷ்ஷுடன் ‘பாட்டியாலா பெக்’ மதுபானத்தை அசால்ட்டாக குடித்துக் கொண்டிருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ஒரு இளம்பெண் பொது இடத்தில் இப்படி பகிரங்கமாக மது அருந்துவது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

​இந்த நிலையில், அந்த வழியாக வந்த ஒரு சர்தார்னி (சீக்கிய பெண்மணி), நடுரோட்டில் மது அருந்திக் கொண்டிருந்த பெண்ணை கண்டதும் ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக வெளுத்து வாங்கத் தொடங்கினார். நடுரோடு என்றும் பார்க்காமல் அந்த பெண்ணை பிடித்து இழுத்து தர்ம அடி கொடுக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொது இடத்தில் போதையில் ரகளை செய்த பெண்ணுக்கு சர்தார்னி சரியான பாடம் புகட்டியுள்ளார் என ஒரு தரப்பினரும், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து இப்படி தாக்கக் கூடாது என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.