மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர எல்லையில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் நிலம் வாங்குவது தொடர்பாக வந்த ராணுவ வீரரின் மனைவியை, அய்யாஸ் தாஜ் மதாரே மற்றும் அமீன் ஷேக் ஆகிய இருவரும் போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல், அதனை வீடியோவாக பதிவு செய்து, அந்த பெண்ணை மிரட்டி லட்சக்கணக்கில் பணமும் பறித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் இத்துடன் நின்றுவிடாமல், அந்த பெண்ணை மிரட்டி ஒரு குறிப்பிட்ட மத வழிபாடுகளை செய்ய வைத்துள்ளனர்.
Wife of an Armed Force was drugged, gang-raped, filmed by Ayyaz Taj Madare and Ameen Shaikh on the pretext of land deal in Nagpur.
Blackmailed, extorted lakhs, forced to drink Halal liquid, chant Islamic verses, converted by Hazrat Maulana in Chhindwara, MP, "nikah" to Ayyaz and… pic.twitter.com/U42vAOT8XN
— Team Hindu United (@TeamHinduUnited) June 15, 2026
இதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதிக்கு அந்த பெண்ணைக் கடத்திச் சென்று, அங்கிருந்த ஹஸ்ரத் மவுலானா என்பவரின் முன்னிலையில் கட்டாய மதமாற்றம் செய்து, அய்யாஸ் என்பவருடன் நிக்காஹ் செய்ய வைத்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிட வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இந்த கொடூரங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான ராணுவ வீரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மவுலானாவை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
