82 வயதான தள்ளாத வயதிலும் யாரிடமும் கையேந்தாமல், தன் குடும்பத்தைக் காப்பாற்ற மும்பையில் ஒரு தெருவோரம் அமர்ந்து வீட்டு தயாரிப்பு பலகாரங்களை விற்று வரும் மன்சுக் காக்கா என்ற முதியவரின் நெஞ்சை உலுக்கும் வாழ்வாதாரப் போராட்டம்!” தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

சேலைக்கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்த இவருக்கு, கோவிட் காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலையும் பறிபோனதால், இவரைக் காப்பாற்ற இவரது மகனும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

நோய் பாதிப்பில் இருந்து மீண்ட மன்சுக்காக்கா, முடங்கிப் போகாமல் தனது சகோதரி வீட்டிலேயே சுத்தமாகத் தயாரிக்கும் முறுக்கு, தட்டை, சீடை, காரச்சேவு மற்றும் சுவையான சிப்ஸ் போன்ற 20 வகையான மொறுமொறுப்பான காரசார வீட்டுப் பலகாரங்களைப் பெட்டிகளில் அடைத்து, தினமும் பல மணி நேரம் காத்துக்கிடந்து விற்பனை செய்து வருகிறார். அன்றைய வரவு செலவு ஒரு டைரியில் குறிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

ஒரு நாளைக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் இவருக்கு ஆதரவளிக்குமாறு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த உன்னதப் பதிவு லட்சக்கணக்கானோரை நெகிழ வைத்துள்ள நிலையில், “உழைப்பின் இலக்கணமாக விளங்கும் இந்த இரும்பு மனிதருக்கு நம்மால முடிந்த ஆதரவை வழங்குவோம்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களைக் கமெண்ட்டுகளில் அள்ளி வீசி வருகின்றனர்.

“>