“ஐரோப்பாவை விட இந்திய தியேட்டர்கள்ல படம் பார்க்குறது ரொம்ப சொகுசாவும் ஆடம்பரமாவும் இருக்கு சார், அங்கே அவ்ளோ காசு வாங்குனாலும் இந்த வசதி இல்லை!” என்று உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற வெளிநாட்டுப் பெண் இந்தியத் திரையரங்குகளின் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ, தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
‘சாண்ட்ரா ஆன்’ (dra.sandraa) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், இந்தியாவில் உள்ள மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் மிகக் குறைந்த கட்டணத்திலேயே சொகுசான சாய்வு இருக்கைகள் (Recliner seats), நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கே தேடி வந்து வழங்கப்படும் உயர்தர உணவுச் சேவை மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கிடைப்பதைப் பார்த்துத் தான் முற்றிலும் பிரமித்துப் போனதாக அவர் ஓப்பனாகப் பாராட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் அதிக டிக்கெட் விலை வசூலித்தாலும் மிகவும் சாதாரண அடிப்படை வசதிகள் மட்டுமே வழங்கப்படுவதாக அவர் செய்துள்ள இந்த ஒப்பீடு, கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாத் துறை அடைந்துள்ள அசுர வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் வேளையில், இந்தியாவின் பொழுதுபோக்குக் கலாச்சாரம் உலக நாடுகளுக்கே சவால் விடும் வகையில் மாறிவிட்டது என்று இந்திய நெட்டிசன்கள் பலரும் பெருமிதத்தோடு தங்களது கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
View this post on Instagram
“>
