ஹிமாச்சலப் பிரதேசம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 40 வயது பெண்ணிடம், அங்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. சிறுவன் தகாத முறையில் நெருங்கியபோது, அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அருகிலிருந்த கம்பு மற்றும் அரிவாளால் அப்பெண்ணை கொடூரமாக தாக்கி தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான காயங்களால் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை, அங்கிருந்த கிராம மக்கள் மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 5 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த பொருட்களை கைப்பற்றி, சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.