உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில் , கோரக்பூர் கிளப் முன்பாக, இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு, அதற்குள் மதுபோதையில் இருந்த காதல் ஜோடி அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரிக்ஷாவை நடுரோட்டில் நிறுத்திய அதன் ஓட்டுநர், சிவப்பு நிற உடையில் இருந்த பெண் ஒருவரின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார்.
அப்போது, இருவரும் பொதுமக்கள் முன்னிலையிலேயே அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டதாகவும், மற்ற வாகனங்கள் ஹாரன் அடித்தபோதும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிகிறது. சுமார் 20 நிமிடங்கள் இந்தப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகச் செயல்கள் தொடர்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்கத் தொடங்கிய பின்னரே, அவர்கள் தள்ளாடியபடியே ரிக்ஷாவை எடுத்துச் சென்றனர். இந்தச் சட்டவிரோதச் செயல் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
