நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதன் பின் ஆமை குஞ்சுகளை கடலில் விடப்படுகிறது.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாகவும், கடற்கரையில் உள்ள சேற்றில் சிக்கியும், மீனவர்களின் வலையில் சிக்கியும் முட்டையிட வரும் ஆமைகள் இறந்து விடுகிறது. மேலும் அழிந்து வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் மூலம் டு ஹாங் எனும் புதிய செயலி  அறிமுகபடுத்தி இருக்கிறோம். இதில் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது வலையில் ஆமைகள் சிக்கினால் அதனை எடுத்து கடலில் விடுவதை வீடியோ எடுத்து இந்த செயலியில் பதிவிறக்கம் செய்தால் அவர்களுக்கு வனத்துறையினர் மூலமாக சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.