தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோலிவுட்டின் இந்த மெகா கூட்டணியை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்காலத்தில் இருக்கும் பிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களால் தமிழ் திரையுலகின் டாப் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் சம்பளம் மற்றும் பிரம்மாண்ட பட்ஜெட்டைத் தாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தனை பெரிய நட்சத்திரக் கூட்டணியை ஒரே படத்தின் கீழ் கொண்டுவரும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலினுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதார மற்றும் நிறுவனத்தின் ஆதிக்கம் இன்னமும் கொடிகட்டிப் பறப்பதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் திரைப்படத் துறையில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த உதயநிதி, தற்போது அரசியலில் பிஸியாக இருந்தாலும், சினிமா மீதான அவரது பிடி மாறவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

“>

 

எனவே, திரைப்படத் தயாரிப்பு மீது அவருக்கு உண்மையான ஆர்வம் இருப்பின், கட்சியை மேலும் அனுபவமிக்க ஒரு தலைவரிடம் ஒப்படைத்துவிட்டு அவர் முழுமையாகத் திரைப்படத் தயாரிப்புத்துறைக்கே திரும்பலாம் என்றும், அதுவே தமிழக அரசியலுக்கும் நல்லது என்றும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.