தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற விவாதங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, சமூகநீதி மற்றும் சமத்துவம் குறித்துப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்குச் சட்டப்பேரவை வாயிலாகக் கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களுக்கு நாகரிகத்தைக் கற்றுக்கொடுத்தோம் என்றும், நாங்கள்தான் எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என்றும் தம்பட்டம் அடிக்கும் சாதிய மற்றும் பாரம்பரிய ஆதிக்க சக்திகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் தனது உரையின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திமுக தரப்பில் சில முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து வந்த ஆர்.எஸ். பாரதிக்கும் உரிய முறையில் தனது வாதங்களின் மூலம் தக்க சாட்டையடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ஏற்கனவே கூறிச் சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க “யாருடைய கருணையும் யாருக்கும் பிச்சை போடப்படவில்லை; இது உரிமையின் கேள்வி” என்ற புகழ்பெற்ற வரிகளைச் சட்டமன்றத்தில் மீண்டும் எதிரொலிக்கச் செய்தார்.

“>

 

சமூக சமத்துவத்தையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் இந்தப் பேச்சு தற்பொழுது அரசியல் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.