வருடக்கணக்கில் அன்போடு வளர்த்து, உணவு கொடுத்து பராமரித்து வந்த ஒட்டகமே, தனது உரிமையாளரை மிகக் கொடூரமாகக் கடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு எத்தகையது என்பதைப் பேசும் இந்த காலத்தில், வளர்த்த விலங்கே காலனாக மாறிய இந்த கோரச் சம்பவம், கேட்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது.
பல ஆண்டுகளாகத் தன்னைப் பராமரித்து வந்த நபரையே, அந்த ஒட்டகம் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரமாகக் கட்டப்பட்டிருந்த அந்த ஒட்டகம், கடுங்கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் கோபத்தை உணராமல், அதைக் அவிழ்க்க முற்பட்ட உரிமையாளரின் மண்டை ஓட்டை, அந்த ஒட்டகம் தனது சக்திவாய்ந்த தாடைகளில் கவ்விப் பிடித்துள்ளது.
வெறும் பத்தே வினாடிகளில், ஒரு தர்பூசணிப் பழத்தைப் பிளப்பது போல அவரது தலையைக் கடித்துக் குதறியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த பயங்கரமான காட்சியை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து ஓடியதுடன், செய்வதறியாது உறைந்து போயினர். விலங்குகள் எவ்வளவுதான் பழகியிருந்தாலும், அவற்றின் இயல்பு நிலையிலும் கோபத்தின் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் கொடூரமான முறையில் உணர்த்தியுள்ளது.
குறிப்பாக, கடுமையான வெயில் மற்றும் கோடைக்காலத்தில் ஒட்டகங்கள் அதிக கோபத்திற்கு ஆளாகும் தன்மையுடையவை என்பதால், அவற்றை பராமரிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விலங்கியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அன்பாக வளர்த்த விலங்கே உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
