செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, தண்டனை பெற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறார்கள் மெயின் கேட்டை உடைத்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கிருந்து தப்பிச் சென்ற அந்தச் சிறார்கள், வழியில் தென்பட்ட 3 நபர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்து செல்போன், ரொக்கப் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்புக் குறைபாட்டால் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தப்பியோடிய சிறார்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.