மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள பங்காட் ஹோட்டலில் நடந்த ஒரு சம்பவம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருக்கிறார் என்ற ரகசிய தகவல் மனைவிக்கு கிடைத்துள்ளது. பதறியடித்துக் கொண்டு, அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த மனைவி, சந்தேகப்பட்ட அந்த அறையின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடி, உள்ளே தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.
எதுவுமே பேசாமல் தன் கணவனின் கன்னத்தில் நறநறவென தடா தடா என்று தப்பா அடிகளை இறக்க ஆரம்பித்தார். நிலைமை கையை மீறிப்போனதும், கணவன் பயந்துபோய் “நானாக வரவில்லை, இந்த பெண் தான் என்னை கூட்டிட்டு வந்தாள்” என்று பழியை தூக்கி அந்தப் பெண் மீது போட்டான். உடனே அந்தப் பெண், “இவருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது, இன்னும் விளையாடி சாப்பிடும் வயசு தான் எனக்கு” என்று அப்படியே அந்த இடத்தை விட்டு நழுவ பார்த்தார்.
सब ब्लंडर हो गया आजकल की लड़कियां भी..??
मध्यप्रदेश के रीवा में पत्नी को पता चला कि पति होटल में प्रेमिका के साथ है। तलाश करते हुए पंगत होटल के उस रूम तक पहुंची।।
और दरवाजा खुलने पर पति को दनादन थप्पड़ मारने शुरू कर दिए। पति बोला, लड़की लेकर आई है। लड़की बोली, हमें नहीं मालूम… pic.twitter.com/tylibdEZDk
— Dinesh shukla (Journalist) 🇮🇳 (@Dinehshukla) July 13, 2026
ஆனால், விடாத மனைவி கணவனை அடித்துக்கொண்டே போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றார். அங்கே போன கணவனோ, “எனக்கு இவளுடன் வாழ பிடிக்கவில்லை, விவாகரத்து வேண்டும், அந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்வேன்” என்று அடம் பிடிக்க, மனைவியோ “அவ்ளோ சீக்கிரம் உன்னை விடமாட்டேன், விவாகரத்து தர முடியாது” என்று மல்லுக்கட்டினார். இதனால் அந்த போலீஸ் ஸ்டேஷனே சில மணி நேரம் போர்க்களமாக மாறியது.
