இன்றைய அவசர உலகத்தில், சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளுக்காக கணவன் – மனைவிக்கு இடையே விவாகரத்துக்கள் பெருகுவதும், சில இடங்களில் கணவனுக்கு மனைவியே துரோகம் இழைக்கும் சம்பவங்களும் தினந்தோறும் செய்திகளாக வந்து நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால், இதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும், குறிப்பாக இந்த தலைமுறைப் பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் ஒரு உன்னதமான மனைவியின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கண்களையும் குளமாக்கியுள்ளது.
ஒரு பரபரப்பான ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம். அங்கே வெறும் தரை விரிப்பில் கணவன் படுத்துக் கொண்டிருக்க, சுற்றியிருக்கும் உலகத்தையோ, கடந்து செல்லும் மனிதர்களையோ பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் கணவரின் கால்களை மிகவும் அன்போடு அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி. தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோதும், வறுமை வாட்டியபோதும், அவரை ஒரு நொடி கூட கைவிடாமல் ஒரு தாயைப் போல பார்த்துக்கொள்ளும் அந்த பெண்ணின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த இணையவாசிகளை உருக வைத்துள்ளது.
आज के टाइम मे जिस तरह से पतियों को मारने का ट्रैंड चल रहा है जिस तरह से पत्निया अपने पति को एक पल मे निपटा रही है
इसी जमाने मे देखो ऐसी पत्निया भी है जो सिर्फ अपने पति के लिए हर हाल मे वफादार साबित हुई है
यह पत्नी जिस तरीके से अपने पति की खिदमत कर रही है इसको देख कर लगता है pic.twitter.com/ysJpCaTIWF
— Noor khan (@Noorkhan7_) July 13, 2026
ஆடம்பரமான படுக்கையோ, சொகுசான வாழ்க்கையோ தனக்கு முக்கியமில்லை, தன் கணவனின் சேவையே தனக்கு உலகம் என்பதை அந்தப் பெண் தன் செயலின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, “இவள் வெறும் மனைவி அல்ல, வாழும் தெய்வம்” என்று பலராலும் போற்றப்பட்டு வருகிறது.
