இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் அண்மைக்காலமாக வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் கூடுதல் நேர வேலைக்கான ஊதியம் தராமல் ஊழியர்களைச் சுரண்டுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தமக்குரிய விடுமுறை நாளில் வேலை செய்ய மறுத்து மேனேஜருக்கு நச்சென்று பதிலடி கொடுத்த ஆஃப்ரின் என்ற பெண் ஊழியரின் வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான ஊழியர்களின் மனசாட்சியைத் தொட்டு வருகிறது.
அந்த வைரல் வீடியோவில், சனிக்கிழமை விடுமுறை நாளில் போன் செய்து “டீம் உனக்காக ஆபீஸில் வெயிட் பண்ணுது, உடனே கிளம்பி வா” என்று மேனேஜர் கட்டளையிட, அதற்கு அந்தப் பெண், “கடந்த இரண்டு மாதங்களாக வீக்கெண்டில் வந்து உங்களுக்குக் கை கொடுத்தது உதவிக்காகத் தானே தவிர, அது என் வழக்கமான வேலை அட்டவணை கிடையாது.
இனிமேல் நான் இலவசமாக வேலை செய்யத் தயாராக இல்லை, அப்படி வர வேண்டும் என்றால் ஓவர்டைம் காசு கொடுங்கள்” எனத் துணிச்சலாகக் கேட்கும் ஆடியோ கார்ப்பரேட் பாஸ்களை அதிர வைத்துள்ளது.
View this post on Instagram
“>
இது தான் இன்றைய இந்திய நிறுவனங்களின் கொடூர முகம், வார இறுதி நாட்களில் வேலை வாங்கத் துடிக்கும் நிறுவனங்கள் அதற்குரிய ஊதியத்தைத் தருவதில்லை” என்று லட்சக்கணக்கான ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் தங்களது சொந்தக் கண்ணீர் அனுபவங்களைக் பகிர்ந்து இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
