உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் திடீர் பணிநீக்கக் கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வேளையில், ஒரே நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு வேலையை இழந்த இளைஞர் ஒருவர், கார்ப்பரேட் டார்ச்சருக்குப் பயந்து முடங்கிவிடாமல் எடுத்த அசாத்திய முடிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வனேஷ் மாலி என்பவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வைரல் பதிவில், தனது நண்பர் ஒருவர் பெரிய ஐடி நிறுவனத்தில் 12 ஆண்டுகள் மிகத் திறமையாகப் பணிபுரிந்தும் சமீபத்தில் லே-ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்காக அவர் சற்றும் வருத்தப்படாமல் “நான் இந்த மாற்றத்திற்கு ஏற்கனவே தயாராகத்தான் இருந்தேன்” என்று கூறி கார்ப்பரேட் உலகிற்கு குட்பை சொல்லி விட்டுத் தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
One of my friend worked in a big IT company for more than 12 years. He was very good at his job.
Few days back, the company laid him off. Many people lost their jobs.
But my friend who got laid off was not sad.
He said, “I was ready for this.”
He decided not to work in IT…
— Vanesh Mali (@vaneshmali) July 12, 2026
“>
அங்கு தனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு துணிக்கடையையும், குடும்ப நிலத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையையும் தொடங்கி புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள அந்த இளைஞரின் தைரியத்தைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், “வாழ்க்கையில் எப்போதுமே ஒரு மாற்றுத் திட்டம் மற்றும் போதிய சேமிப்பு இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி” என்று கூறி இந்த நெகிழ்ச்சியான பதிவை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
