ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தேசியா ஷரோவா, இந்தியாவில் வசிக்கும்போது தான் கற்றுக்கொண்ட சுவாரஸ்யமான ஒன்பது விஷயங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கலாச்சாரத்திற்கு எவ்வளவு விரைவாகவும், நுணுக்கமாகவும் பழகிக்கொள்கிறார் என்பதை இது காட்டுகிறது.
சமையலில் பிரஷர் குக்கர் விசில் கணக்கு, போக்குவரத்து நெரிசலில் நான்கு திசைகளையும் கவனித்து வாகனத்தை ஓட்டுவது, பண்டிகை காலங்களில் அண்டை வீட்டாருடன் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் மிக நேர்த்தியாகப் புரிந்து கொண்டுள்ளார்.
மேலும், துணிகளை நேரடி வெயிலில் காய வைப்பதைத் தவிர்ப்பது, கொசுக்களை விரட்ட ஊதுபத்தி பயன்படுத்துவது மற்றும் கூகுள் மேப்ஸை விட உள்ளூர் மக்களின் வழிமுறைகளை அதிகம் நம்புவது போன்ற பழக்கங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
குறிப்பாக, இளைஞர்களை ‘ப்ரோ’ என்று அழைப்பது, பல மொழிகளைக் கலந்து பேசுவது மற்றும் வீட்டிற்கு வரும் எவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் வழங்குவது போன்ற விஷயங்கள் அவருக்கு வியப்பை அளித்தாலும், இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அவற்றை அவர் ரசித்து ஏற்றுக் கொண்டுள்ளார். அனஸ்தேசியாவின் இந்தப் பதிவு, இந்திய வாழ்க்கையின் தனித்துவமான அழகை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
