‘வடா பாவ் கேர்ள்’ என்று சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற டெல்லியைச் சேர்ந்த சந்திரிகா தீட்சித், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான அவர், தற்போது மீண்டும் சாலையோரம் தள்ளுவண்டியில் வடா பாவ் விற்கும் தனது பழைய தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.
இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பலர் அவரது விடாமுயற்சியைப் பாராட்டியும், இன்னும் சிலர் அவரை சமூக வலைதளங்களில் கேலி செய்தும் வருகின்றனர். ‘காலத்தை விட உயர்ந்தது எதுவுமில்லை’ என்று அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள கருத்து, சமூக வலைதளங்களில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சிலர், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடங்கிய கடையென்ன ஆனது என்றும், இது விளம்பரத்திற்காகச் செய்யும் நாடகமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் எனப் பல சர்ச்சைகளில் சிக்கிய சந்திரிகா, தற்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த திடீர் மாற்றம் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
