அங்கித் பாண்டே என்ற பயனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான கதை, மனிதாபிமானம் இன்னும் அழியவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒருமுறை ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த அங்கித், தனது வீட்டிற்கு வந்த டெலிவரி ஊழியரின் கண்களில் கண்ணீருடன் கூடிய சோகத்தைக் கண்டார்.
விசாரித்ததில், அந்த ஊழியரின் தாய் படிக்கட்டில் விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதை அறிந்தார். உடனடியாகத் தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பிய அவருக்கு, ரயில் பயணம் நீண்ட நேரமாகும் என்பதால் மிகுந்த கவலையில் இருந்தார். இதைக் கேட்ட அங்கித், எந்தத் தயக்கமும் இன்றி அவருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, அவர் குறித்த நேரத்தில் தாயைச் சென்றடைய உதவினார்.
இந்தச் சிறிய உதவி, அந்த டெலிவரி ஊழியரின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் பத்திரமாக ஊர் சென்று தாயைச் சந்தித்ததுடன், தற்போது அவரது தாயார் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணத்தை விட, சரியான நேரத்தில் செய்யப்படும் மனிதாபிமானமே ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த சான்றாகும். சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படும் இந்தக் கதை, சுயநலம் மிகுந்த இந்த உலகில், எதிர்பார்ப்பு ஏதுமின்றி பிறருக்கு உதவும் நல்ல உள்ளங்கள் இன்றும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
