உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவனுக்குத் தெரியாமல் காதலனுடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மனைவி, கணவனிடம் கையும் களவுமாகச் சிக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரண்டு சென்று குறிப்பிட்ட ஹோட்டல் அறையை அதிரடியாக முற்றுகையிட்டுள்ளார்.

கதவைத் திறந்ததும் உள்ளே தனது மனைவி காதலனுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது மொபைல் போனில் அவர்கள் இருவரையும் வீடியோ எடுத்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட கணவன் தரப்பில் கூறப்படுவதாவது, அந்தப் பெண் தனது காதலனுடன் சொகுசாக வாழ்வதற்காகவே கணவனுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

மேலும், கணவனைப் பழிவாங்குவதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் பொய் குடும்ப வன்முறை (Domestic Violence) வழக்கையும் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது அந்தப் பெண் காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்தது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.