அம்மாவுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் கோபித்துக்கொண்டு இரவு உணவைத் தவிர்த்த இளைஞர் ஒருவர், நள்ளிரவில் பசியால் தவித்தபடி சமையலறைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நள்ளிரவு 2 மணியளவில் யாருக்கும் தெரியாமல் பசியாற வந்த மகனை, அமைதியாகப் பின்தொடர்ந்து வந்த தாய் கையும் களவுமாகப் பிடிக்கும் அந்தத் தருணம் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by all world (@allworld.memes65_)

கோபப்படுவதற்குப் பதிலாக, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்ட அந்த நிகழ்வு, பலருக்கும் தங்களின் சொந்தக் குடும்ப நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.

‘அலோ வேர்ல்டு’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, இதுவரை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

எத்தனை வயதானாலும் பெற்றோரிடம் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ உணர்வுப்பூர்வமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

வீட்டின் சின்னஞ்சிறு சண்டைகள், இது போன்ற சிரிப்புடனும் அன்பாகவும் முடிவதே குடும்பங்களின் அழகு என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.