சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகப் பலரும் எல்லை மீறிச் செயல்படுவது உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த இரும்பு கம்பியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாட முயன்றிருக்கிறான்.

அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை அருகில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தாரே தவிர, அவனை மீட்க முயற்சிக்கவில்லை.

எதிர்பாராத விதமாகச் சிறுவனின் கைப் பிடி நழுவி, அவன் மாடியிலிருந்து கீழே விழுந்து விடுகிறான்; விழுந்த பிறகுதான் அந்தப் பெண் பதறிப்போய் போனை கீழே போட்டுவிட்டு ஓடுகிறார்.

இந்த அதிர்ச்சிகரமான காட்சி @Drx_Nilesh7 என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சிறுவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் கசிகின்றன, ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.

ரில்களுக்காகச் சொந்தக் குழந்தைகளையே கவனிக்கத் தவறும் பெற்றோரின் இந்த அலட்சியப் போக்கு, நெட்டிசன்களைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.