கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில், பிறந்து ஒரு மணி நேரமே ஆன நிலையில் ஆதரவற்றுக் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கேட்பாரற்று கிடந்த குழந்தையை  உடனடியாக மீட்ட அதிகாரிகள், அதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். தற்போது அந்தப் பச்சிளம் குழந்தை நல்ல ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய, அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

குழந்தையை வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.