தேசிய அளவில் நீட் மற்றும் பிற அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறும்போது, அதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பினர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இப்போராட்டக் களத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குத் தன்னார்வலர்கள் தண்ணீர், மோர் மற்றும் பிற உணவுப் பொருட்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தன்னார்வலர் ஒருவரிடம் செய்தியாளர், “இந்தத் தர்ணாவிற்கான நிதி உதவி எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
जंतर मंतर पर काक्रोच जनता पार्टी के प्रोटेस्ट में पानी पिला रही लङकी ने फंडिंग के सवाल पर कहा- मोदी जी 15 लाख दिये थे, वही खर्च कर रहे। pic.twitter.com/ZJlEAsCkS6
— Dr. Om Sudha (@dromsudhaa) July 3, 2026
“>
அதற்கு அந்தப் பெண், நகைச்சுவையாகவும் அதே சமயம் கிண்டலாகவும், “மக்களின் பங்களிப்பால் இது நடக்கிறது. பிரதமர் கூறிய அந்த 15 லட்சம் ரூபாயில்தான் இப்போதைக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கல்வி தொடர்பான முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் தீவிரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
