புதுச்சேரியில் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைக் கொலை வெறியுடன் வீடு புகுந்து தாக்கியதாக, தற்போதைய அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் சனிக்கிழமை (ஜூலை 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மரியா வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இன்றைய தினமே ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் மரிய வில்சனுக்கு பதிலாக அவருடைய வக்கீல் ஆஜராகி இருந்தார். ஆனால் நீதிபதி கண்டிப்பாக மரியவில்சன் ஆஜராக வேண்டும் என கூறினார். மேலும் இதன் காரணமாக அடுத்த கட்ட விசாரணைக்கு அவர்கள் நேரில் ஆஜர் ஆவாரா இல்லையா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
