நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விஜய் தனது திரையுலக வாழ்க்கையில் ஒரு நல்ல திரைப்படத்தைக் கூட மக்களுக்குக் கொடுக்கவில்லை என்றும், அப்படிப்பட்டவரா தமிழகத்தில் நல்லாட்சியைக் கொடுக்கப் போகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். சீமானின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
Simon : 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தரல. இந்தாளு நல்லாட்சி தரப் போறாரா..?
— Siva Tvk (@Smileysiva97) June 7, 2026
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் சீமான் பேசிய பழைய வீடியோ ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். அந்த நேர்காணலில், தனக்கு விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படமும், ‘பிகில்’ படத்தின் குறிப்பிட்ட காட்சியும் மிகவும் பிடிக்கும் என சீமானே பாராட்டியுள்ளார். அன்று பாராட்டிவிட்டு நேற்று அரசியல் காரணங்களுக்காக சீமான் மாற்றிப் பேசுவது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என தவெகவினர் அந்த வீடியோ மூலம் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
