துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில், ஒரு நபர் தனது 3 வயதுப் பெண் குழந்தையைக் கத்தியைக் காட்டிப் பிணைக் கைதியாகப் பிடித்த கொடூரச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது சொந்த மகளையே கத்தியால் மிரட்டியது மட்டுமன்றி, வீட்டின் ஜன்னல் வழியே வெளியே தலைகீழாகத் தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்த நபரை எவ்வளவோ எச்சரித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் குழந்தையை விடுவிக்க மறுத்துக் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள், வேறு வழியின்றி அந்த நபரை நடுநிலையாக்க (Neutralize) அதிரடி முடிவை எடுத்தனர்.
‼️À Ankara, un homme qui a pris en otage sa fille de 3 ans avec un couteau et l'a suspendue par la fenêtre a été abattu par la police pour le neutraliser pic.twitter.com/WbyE8g3IDW
— 75 Secondes 🗞️ (@75secondes) June 7, 2026
அதன்படி, துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டார். போலீசாரின் இந்தத் துரிதமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையால், அந்த 3 வயதுப் பச்சைக் குழந்தை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டது. பெத்த மகளையே கொல்லத் துணிந்த தந்தையைக் காவல்துறை சுட்டுக் கொன்ற இந்தத் திக் திக் விவகாரம் தற்போது சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
