ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுடன் கைகோர்த்தது மட்டும் குதிரை பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தங்கள் கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்த 3 எம்எல்ஏக்களும் சட்டப்படி சபாநாயகரைச் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்த பிறகே, முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக விளக்கம் அளித்தார்.

“>

 

மேலும், அவர்கள் ராஜினாமா செய்த அடுத்த கணமே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.