குர்கானின் செக்டார் 62 பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஒரு நபரின் காலில், அதிவேகமாக வந்த கார் ஒன்று ஏறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் காரை ஓட்டி வந்த பெண்ணிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அந்த நபரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், “நீ ஏன் நடுரோட்டில் நடக்கிறாய்? அதனால்தான் காரில் அடிபட்டது” என்று கூறி சண்டையிட்டுள்ளார். அதோடு நிறுத்தாமல், தனது கணவர் போலீசில் உயர் பதவியில் இருப்பதாகக் கூறி, அந்த நபரை மிரட்டவும் முயற்சி செய்துள்ளார்.
A woman ran over a man's foot while he was walking on the side of the road.
Instead of saying sorry and apologizing, she started threatening him and saying that her husband is in the police.
Also, what's the logic? If her husband is in the police, she can do anything? pic.twitter.com/Y5t74vnnH4
— ︎ ︎venom (@venom1s) June 4, 2026
இதைத் தொடர்ந்து, அந்த பாதசாரி காரின் நெம்பர் பிளேட் மற்றும் அந்த பெண்ணின் மிரட்டலைத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவறு செய்தவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இந்தியாவில் சட்டம் என்பது சாமானியர்களுக்கு மட்டும்தானா என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை மிகக் கடுமையாகப் பதிவு செய்து வருகின்றனர்.
