தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், அரசுக்கு எதிராக வைக்கப்படும் தொடர் விமர்சனங்கள் குறித்து தவெக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். தவெக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சியான திமுக-விற்கும் அவர் தனது பாணியில் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார்.

​இதுகுறித்து அவர் பேசுகையில், “புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் ஆறு மாத காலம் பொறுத்திருப்போம், அதற்குப் பிறகுதான் கேள்விகளை எழுப்புவோம் என்று சட்டமன்றத்தில் சொன்னவர்கள், இப்போது ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 5 நாட்களும் 10 நாட்களும் ஆன உடனே ஏன் இப்படித் துள்ளிக் குதித்துக் கேள்வி கேட்கிறார்கள்?” என்று எதிர்க்கட்சியைச் சாடினார்.

மேலும், “ஆறு மாதம் பொறுப்போம் என்று அவர்கள் சொன்னதை மீடியாக்களாகிய நீங்கள்தானே செய்தியாகப் போட்டீர்கள்? இப்போ ஏன் 15 நாளுக்குள்ள இவ்வளவு விமர்சனங்கள்?” என ஊடகங்களுக்கும் நெத்தியடி கேள்வி எழுப்பியுள்ளார். செங்கோட்டையனின் இந்த அதிரடி மற்றும் ஆவேசமான பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.