இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளருமான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மப் பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருக்கும் ஒரு நபர் ஹோட்டல் வரவேற்பறையில் அறை முன்பதிவு செய்வது போலக் காட்சிகள் உள்ளன.
அவர் ஆர்ச்சர் தான் என்று நெட்டிசன்கள் கூறி வந்தாலும், இது பழைய வீடியோவா அல்லது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், இந்த வீடியோவை வெளியிட்ட நபருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதும், சிசிடிவி காட்சிகளை இப்படி அனுமதியின்றி வெளியிடுவதும் மிகப்பெரிய தவறு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Jofra Archer with a girl at a hotel in Jaipur around midnight while booking a room. 👀
Archer enjoying his time in Jaipur. pic.twitter.com/kShqq2pJ7L
— Sonu (@Cricket_live247) May 7, 2026
“>
“வியூஸ் மற்றும் லைக்ஸ்காக மற்றவர்களின் தனிப்பயுரிமையை சிதைக்கும் இவர்களுக்கு எதிராக ஆர்ச்சர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.
