ஐபிஎல் 2026 தொடரில் வீரர்கள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் பிசிசிஐ விதிகளை மீறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது இரண்டு கைகளிலும் கனமான பைகளை சுமந்து வர, அவரது மனைவி கையில் செல்போனுடன் மட்டும் முன்னால் நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் விவாதமானது.

இதுமட்டுமின்றி, வீரர்களின் தோழிகள் மற்றும் அங்கீகாரம் இல்லாத நபர்கள் அணியின் பேருந்துகளில் பயணம் செய்வதும், ஹோட்டல் அறைகளுக்குள் நுழைவதும் பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விதிமீறல்களைத் தொடர்ந்து, பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் டக் அவுட்டில் போன் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதும், கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் புகைபிடித்ததும் பெரும் புகாராக எழுந்தது.

“>

 

இனிவரும் காலங்களில் வீரர்கள், அணி அதிகாரிகள் அல்லது உரிமையாளர்கள் என யாராக இருந்தாலும் பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.