சமூக வலைதளங்களில் ஸ்க்ரோல் செய்யும்போது, திடீரென ஒரு ஆக்ரோஷமான சிங்கம் தற்காப்பு ஏதுமற்ற ஒரு பெண்ணின் மிக அருகில் நின்று மோப்பம் பிடிப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் உடல் சிலிர்க்காது?
ஆரஞ்சு நிற சேலை அணிந்த பெண் ஒருவர் சிங்கத்தின் கூண்டுக்குள் விழுந்து பயத்தில் உறைந்து போய் சுவரை ஒட்டி அமர்ந்திருக்க, சிங்கம் அவரை நெருங்கும் இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஆனால், இந்த வீடியோவை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று ஒளிந்துள்ளது.
*”चिड़ियाघर में एक महिला शेरों के बाड़े में गिर गई, कर्मचारियों को समझ नहीं आया कि कौन सा प्रोटोकॉल लागू करना है, शर्मनाक बात है।
Credit- Original owner video pic.twitter.com/svDEJEkdPc
— Faheem mirza فہیم مرزا 🇮🇳 (@mirzafaheem54) May 6, 2026
உண்மையில் இது ஒரு நிஜமான விபத்து கிடையாது; ‘Shawn Arranha’ என்ற டிஜிட்டல் கலைஞர் AI மற்றும் VFX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய ஒரு மாயத்தோற்றமாகும்.
வீடியோவை உற்று நோக்கினால் ஒளியமைப்பு மற்றும் நிழல்கள் இயற்கைக்கு மாறாக இருப்பதையும், வீடியோவின் கீழே உள்ள வாட்டர்மார்க் மூலமும் இதை உறுதிப்படுத்த முடியும்.
இதுபோன்ற வீடியோக்கள் வெறும் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன என்பதால், எதையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராய்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
