சமூக வலைதளங்களில் சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பிடிப்பட்ட பாம்புடன் விளையாடிக்கொண்டே அதனை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரைத் தீண்டுகிறது.

பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் எந்த அசைவும் இன்றி தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து, அவர் உயிரிழந்திருக்கலாம் என நெட்டிசன்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவம் எங்கு நடந்தது அல்லது அந்த நபரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பாம்புகளைப் போன்ற ஆபத்தான உயிரினங்களைக் கையாளும் போது முறையான பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், “வேடிக்கைக்காகவும் விளம்பரத்திற்காகவும் பாம்புடன் விளையாடுவது உயிருக்கே ஆபத்தாய் முடியும்” என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>

 

இதுபோன்ற அலட்சியமான செயல்கள் உயிரைப் பறிக்கும் அபாயம் கொண்டவை என்பதால், வனவிலங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவோர் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.