சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு திருமண விருந்தின் போது திடீரென பலத்த காற்றும் மழையும் பெய்யத் தொடங்கியது. மழையைக் கண்டவுடன் மற்றவர்கள் ஒதுங்க ஓடிய நிலையில், ஒரு நபர் மட்டும் சாப்பாட்டின் மீதுள்ள தீராத ஆசையினால் அங்கேயே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்.

மழையில் நனையாமல் இருக்க அவர் செய்த ஒரு ‘தேசி ஜூகாட்’  தான் இப்போது இணையத்தையே சிரிக்க வைத்துள்ளது. அவர் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைத் தலைகீழாகத் தூக்கித் தன் தலைக்கு மேல் குடை போலப் பிடித்துக்கொண்டு, கொட்டும் மழையிலும் அசால்ட்டாகத் தனது உணவை ரசித்துச் சாப்பிடுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளைத் தட்டி விடுகின்றனர். “ஆனாலும் இந்த மனுஷனுக்குச் சாப்பாட்டு மேல இவ்வளவு வெறி இருக்கக் கூடாது” என்றும், “புயலே வந்தாலும் இந்த விருந்து சாப்பாட்டை மட்டும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்றும் ஜாலியாகப் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

“வயிற்றுப் பசி தான் உலகத்திலேயே பெரிய பசி” எனச் சிலர் தத்துவங்களையும் உதிர்த்து வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் அந்த நபர் காட்டிய அசாத்திய நிதானம் இப்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.